திரிஷாவை தொடர்ந்து…. இப்போ சமந்தாவா?…. விஜய் தான் சரி வருவார்… நீண்ட நாள் ஆசையை வெளிப்படுத்திய நடிகை…!

இயக்குனர் நியா தாகாஸ்ட இயக்கத்தில், வால் டிசைனிங் ஸ்டுடியோஸ் மோஷன் பிக்சர் நிறுவனத்தின் தயாரிப்பில், 219 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் உருவாகி வரும், தி மார்வெல்ஸ் படமானது வரும் பத்தாம் தேதி அன்று இந்திய ரசிகர்களுக்காக வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் இத்திரைப்படத்திற்கான பிரமோசன் வேலைகளை மேற்கொண்டு வரும் பிரபல நடிகை சமந்தா, தனது கனவு அவெஞ்சர்கள் டீம் குறித்து பேசியிருக்கிறார். அவர் தெரிவித்ததாவது, இந்தியாவில் அவெஞ்சர்கள் கதை உருவாகும் பட்சத்தில், அதில் கண்டிப்பாக அல்லு அர்ஜுன், பிரியங்கா சோப்ரா, அலியா பட் போன்றவர்கள் நடிக்க வேண்டும். மேலும் சூப்பர் ஹீரோவாக நடிகர் விஜய் நடித்தால் நன்றாக பொருந்தும் என்று கூறியிருக்கிறார்.