
முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் நடிகை சமந்தா தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்தார். ஆனால், அதன் பிறகு கடந்த 2021 ஆம் வருடத்தில் இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். அதை தொடர்ந்து சமந்தாவிற்கு மயோசிட்டிஸ் நோய் பாதிப்பு ஏற்பட்டது.
எனவே, நடிப்பதற்கு சிறிது காலம் ஓய்வு கொடுத்துவிட்டு, சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சமீபத்தில் அவர் பேட்டி ஒன்றில் தெரிவித்திருப்பதாவது, “என் வாழ்வில் மிகவும் மோசமான நிலையில் இருந்த சமயம் அது. ஃபெயில்டு மேரேஜ், உடலில் பிரச்சனை, அதன் காரணமாக திரைப்படங்களில் கவனம் செலுத்த முடியாமல் போனது என்று ஒரே சமயத்தில் மூன்று பிரச்சனைகளை எதிர்கொண்டேன்.
அந்த சமயத்தில், இதற்கு முன்பு உடல்நிலை மோசமாகி அதிலிருந்து மீண்ட நடிகர்களின் கதையைப் படித்தேன். அவர்களால் முடிந்தது என்றால், என்னாலும் முடியும் என்று நினைத்துக் கொண்டேன் என்று தெரிவித்திருக்கிறார்.