ஆர்யா பயந்துட்டாரு… முடிவெடுக்க முடியல… எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி குறித்து… மனம் திறந்த நடிகை சங்கீதா…!

நடிகை சங்கீதா, தமிழ் சினிமாவில் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களிடைய பெயர் பெற்றவர். இவர் சமீபத்தில் பங்கேற்ற பேட்டி ஒன்றில், நடிகர் ஆர்யா கலந்து கொண்ட, “எங்க வீட்டு மாப்பிள்ளை” என்ற நிகழ்ச்சி குறித்து பேசி இருக்கிறார். அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளினி நடிகை சங்கீதா தான்.

அவர் தெரிவித்ததாவது, தொலைக்காட்சியில் இவ்வாறு ஒரு நிகழ்ச்சியை நடத்துவதற்கு முன்பாக தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர் ஆர்யாவிடம் பலமுறை அது குறித்து கேட்டுக்கொண்டேன். இது மக்களை ஏமாற்றக்கூடிய நிகழ்ச்சி கிடையாது. உண்மையில் ஆர்யா அவருக்கு பிடித்த பெண்ணை இந்த நிகழ்ச்சி மூலமாக கட்டாயம் திருமணம் செய்து கொள்வார் என்று உறுதியுடன் கூறினார்கள்.

   

ஆர்யாவிடமும் இது குறித்து கேட்டேன். அவர் இதில் எந்த பொய்யும் கிடையாது. கட்டாயம் பிடித்த பெண் கிடைத்தால் திருமணம் செய்வேன் என்றார். அக்ரிமெண்டையும் என்னிடம் காண்பித்தார்கள். அதன் பிறகே, நான் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். தொடக்கத்தில் நகைச்சுவையாகவும், ஜாலியாகவும் சென்ற அந்த நிகழ்ச்சி ஒரு கட்டத்திற்கு மேல் எமோஷனலாக மாறியது.

அதன் பிறகு, ஆர்யாவிற்கு என்ன முடிவு எடுப்பது? என்று தெரியவில்லை. இது தவறாக போய் முடிந்து விடுமோ? என்ற பயம் அவரிடம் இருந்தது. அதனை நான் புரிந்து கொண்டேன். எனவே, அதற்கு மேல் அவரை கட்டாயப்படுத்தி, எங்களின் முடிவை திணிப்பதற்கு நான் விரும்பவில்லை. ஆனால், தொலைக்காட்சி, “அவரை விடாதிங்க, எப்படியாவது பதிலை கேட்டு விடுங்கள்” என்று காதில் கூறிக் கொண்டே இருந்தார்கள். ஆனால், நான் ஆர்யாவிடம், உங்கள் முடிவு அதுதான் என்றால் அதனை ஏற்கிறேன், விட்டுடுங்கள் என்று கூறிவிட்டேன் என்று தெரிவித்திருக்கிறார்.