
நடிகை ஸ்ரேயா கடந்த 2003 ஆம் வருடத்தில் வெளிவந்த எனக்கு 20 உனக்கு 18 என்ற திரைப்படத்தில் துணை நடிகையாக அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து சில திரைப்படங்களில் நடித்து பிரபல நடிகையாக உயர்ந்தார். அதன் பிறகு, ரஜினி, விஜய், விக்ரம் மற்றும் ஜெயம் ரவி, தனுஷ் போன்ற முன்னணி கதாநாயகர்களுக்கு ஜோடி சேர்ந்து முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார்.
ஆனால், அதன்பிறகு அவருக்கு பட வாய்ப்புகள் குறைய தொடங்கியது. எனவே, கடந்த 2018 ஆம் வருடத்தில் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார்.
View this post on Instagram
இவர்களுக்கு, ஒரு பெண் குழந்தை இருக்கிறது. குடும்பத்தோடு மகிழ்ச்சியாக இருக்கும் புகைப்படங்களை அவ்வபோது வெளியிடும் இவர் தற்போது கவர்ச்சி போட்டோ சூட் நடத்தியுள்ளார்.
அதற்கு தன் மகள் கண்ணாடி காண்பிக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் செம அழகாக இருக்கிறது என்று பாராட்டியுள்ளனர். எனினும் சிலர் குழந்தையை இப்படியா பயன்படுத்துவது? என்று விமர்சித்து வருகிறார்கள்.