
உலகநாயகன் கமல்ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதிஹாசன் தமிழ் திரையுலகில் நடிகர், அஜித் விஜய், சூர்யா, தனுஷ், விஷால், போன்ற உச்ச நட்சத்திரங்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து முன்னணி கதாநாயகியாக கலக்கி வந்தார். எனினும் அதன் பிறகு அவர்களுக்கு வாய்ப்புகள் குறையத்தொடங்கியது.
எனவே, தனியார் தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அதன் பிறகும், பட வாய்ப்புகள் இல்லாததால் திரைத்துறையை விட்டு விலகி இருக்கிறார். ஸ்ருதிஹாசன் ஐந்து பேரை காதலித்து அவர்களுடன் சேர்ந்து வாழ்ந்து விட்டு அதன் பின் பிரிந்திருக்கிறார். அது குறித்து பார்ப்போம். தொடக்கத்தில், ஸ்ருதிஹாசன் மைக்கேல் கோர்சேல் என்பவரை காதலித்து வந்தார். அதன் பிறகு, அவரிடமிருந்து பிரிந்து சென்றார்.
அதனைத்தொடர்ந்து விளம்பரங்களில் நடித்த சமயத்தில் இந்தி நடிகரான ரன்பீர் கபூரை காதலித்ததாக கூறப்பட்டது. அவரையும் சிறிது நாட்களில் பிரிந்துவிட்டார்.
அதன்பிறகு, நடிகர் சித்தார்த்துடன் காதல் வயப்பட்டார். சில நாட்கள் கழித்து அவரையும் பிரிந்து விட்டார். இதற்கிடையில் 3 திரைப்படத்தில் நடித்த போது நடிகர் தனுஷ் மீது அவருக்கு காதல் ஏற்பட்டதாக கூறப்பட்டது. ஆனால், அதன் பிறகு, இருவரும் அமைதியாக தனித்தனி பாதையில் சென்று விட்டனர்.
இந்நிலையில் தற்போது, சாந்தனு ஹசாரிக்கா என்ற டூடுள் கலைஞரை காதலித்து வரும் ஸ்ருதிஹாசன் அவருடன் ஒன்றாக ஒரே வீட்டில் வசித்து வருகிறார்.