இவ்ளோ பெரிய மகளை வைத்துக் கொண்டு… 45 வயதில் இளம் வயது ஆண் நண்பருடன் நெருக்கமாக இருக்கும் நடிகை சுரேகா வாணி…? அவரா இப்படி?…

ஆந்திராவை பிறப்பிடமாகக் கொண்டவர் நடிகை சுரேகா வாணி. சுமார் 18 வருடங்களாக 100 படங்களுக்கு மேல் நடித்துவிட்டார். சின்னத்திரையில் நிகழ்ச்சி தொகுப்பாளராக தனது காரியரை ஆரம்பித்தவர். 2003 இல் தெலுங்கு சினிமாவில் நடிகையானார். 2010ல் சுரேகா வாணி உத்தமபுத்திரன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

   

அதன் பிறகு இவர் எதிர்நீச்சல், ஜில்லா, மெர்சல், விஸ்வாசம், லிசா, மாஸ்டர் என பல படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கடந்த 2019 ல் கணவர் சுரேஷ் தேஜா உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மரணம் அடைந்தார். இந்த தம்பதிக்கு சுப்ரிதா என்ற மகள் இருக்கிறார். இவருக்கு தற்பொழுது 20 வயது ஆகிறது.

தற்போது தன்னுடைய மகளுடன் சுரேகா வாணி வசித்து வருகிறார். இவர் தனது மகளின் சம்மதத்துடன் இரண்டாவது திருமணம் செய்துகொள்ள இருப்பதாக சமூக வலைதளங்களில் பேசப்படுகிறது, ஆனால் அவர் இதுவரை தெரிவிக்கவில்லை.

தற்போது நடிகை சுரேகா வாணி ஆண் நண்பருடன் தனிமையில் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி உள்ளது. இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ‘உங்களுக்கு 20 வயசுல ஒரு பொண்ணு இருக்காங்கனு ஞாபகம் இருக்கா? ‘ என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.