சினிமா உலகில் புதுமுக நடிகர், நடிகைகள் வரவேற்பு அதிகமாகி கொண்டே போவதால் டாப் நடிகைகள் கூட பட வாய்ப்பு கிடைக்காமல் அள்ளாடுகின்றனர். அதனால் பட வாய்ப்பை கைப்பற்ற அவர்களும் தொடர்ந்து நாம் எதிர்பார்க்காத கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு அசத்துகின்றனர். அந்த நிலைமைக்கு அவர்களது சினிமா பயணம் உள்ளது.
டாப் நடிகைகளே இப்படி என்றால் குணச்சித்திர நடிகைகள் பற்றி சொல்லவே வேண்டாம். அவர்கள் நிலைமை அதோகதிதான். அந்த வகையில் நடிகை ஷாலு ஷம்மு தமிழ் சினிமா ஆரம்பத்தில் வருத்தப்படாத வாலிபர் சங்கம், தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் போன்ற சிறப்பான படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்திருந்தார்.
காலங்கள் போகப்போக அவருக்கு சுத்தமாக பட வாய்ப்புகள் கிடைக்காமல் போனது. இருப்பினும் தனது திறமையின் மீது நம்பிக்கை வைத்து தொடர்ந்து வாய்ப்பிற்காக ஏங்கிக் கொண்டிருக்கிறார். இருப்பினும் சும்மா இருந்தால் வாய்ப்பு கிடைக்காது என்பதை உணர்ந்த அவர் தற்பொழுது கவர்ச்சி ஆயுதத்தை கையில் எடுத்து கலக்கி வருகிறார்.
தொடர்ந்து தனது கிளாமரான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு அசத்தி வருகிறார். தற்பொழுது இவர் பல லட்சம் மதிப்புள்ள விலை உயர்ந்த ஜாக்குவார் கார் ஒன்றை வாங்கியுள்ளார். இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ”படவாய்ப்பு இல்லை.. சொகுசு கார் மட்டும் எப்படி?” என கேள்வி எழுப்பி வருகின்றனர்.