தன் கணவருடன் கோவாவிற்கு சுற்றுலா சென்ற நடிகை உமா… வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்…

தமிழ் சினிமாவில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றவர் நடிகை உமா. இவர் சென்னையை சேர்ந்தவர். எஸ்.ஐ.இ.டி  கல்லூரியில் Commerce பட்டப்படிப்பை முடித்தார்.அதன் பிறகு மீடியாவின் மீது உள்ள ஆர்வம் காரணமாக சன் டிவியில் சிறிது காலம் செய்தி வாசிப்பாளராக பணியாற்றினார்.

   

அதை தொடர்ந்து பல வருடங்களாக  செய்தி வாசிப்பாளராக பணியாற்றி  வந்தார். ‘வணக்கம் தமிழா’ என்ற  நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார். இந்த நிகழ்ச்சி மூலமாக பல பிரபலங்களை நேர்காணல் செய்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.இந்த நிகழ்ச்சியும் ஆயிரம் எபிசோடுகளுக்கு மேல் சென்றது.

அதன் பிறகு 2000 ஆண்டு ராஜ் தொலைக்காட்சியில் குடும்பம் ஒரு ரகசியம், ஜெயா டிவியில் வீட்டுக்கு வீடு லூட்டி என்ற காமெடி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். 2013 ஆம் ஆண்டு ஜீ தமிழில் ஒளிபரப்பான தாயின் சபதம் என்ற மற்றும் செல்லமே செல்லமே என்ற நிகழ்ச்சி தொகுத்து வழங்கினார்.தொலைக்காட்சிகளில் பிரபலத்தின் காரணமாக  சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

இவர் 1998 ஆம் ஆண்டு வெளியான ‘உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்’ என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார். தமிழில் நீ ரொம்ப அழகா இருக்க, உன்னாலே உன்னாலே, சிவாஜி,  விண்ணைத்தாண்டி வருவாயா, உத்தமபுத்திரன், நண்பன் உள்ளிட்ட பல படங்களில் இவர் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருக்கிறார்.

தமிழ் சினிமாவில் பல நடிகர்களுடன்  அம்மா கதாபாத்திரத்தில் நடித்து  தனக்கான ஒரு இடத்தை பிடித்துள்ளார்.இவர்  கிட்டத்தட்ட  40 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.அதை  தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ என்ற சீரியல் கல்யாண கதாபாத்திரத்தில் நடித்து சீரியலில்  அறிமுகமானார்.

அதை தொடர்ந்து இவர் பல சீரியல்களில் அம்மா கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.இவர்  செய்தி வாசிப்பாளர், நிகழ்ச்சி தொகுப்பாளர், நடிகை என பன்முகத்தன்மை கொண்டவர்.  இவர் 25 வருடமாக திரையுலகில் பணியாற்றி வருகிறார்.நடிகை உமா பத்மநாபன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு சரண்யா என்ற ஒரு மகளும் உள்ளார். தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘மோதலும் காதலும்’ என்ற சீரியலில் ஹீரோயினியின் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.இவர் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக உள்ளவர். தற்போது தன் கணவருடன் கோவா ட்ரிப் சென்றுள்ளார் அங்கு  எடுத்த புகைப்படங்களானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.