
சீமானுக்கும், நடிகை விஜயலட்சுமிக்கும் இடையேயான பிரச்சனை பூதாகரமாக வெடித்து, ஒருவரையொருவர் கடுமையாக தாக்கி பேசினர். இணையத்தில் இவர்கள் இருவரின் வீடியோக்கள் தான் வைரலாக பரவியது. அதனால், பல சர்ச்சைகளும் எழுந்தது. நடிகை விஜயலட்சுமி பிரண்ட்ஸ் உட்பட பல தமிழ் திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
இந்நிலையில், அவர் பேட்டி ஒன்றில் தெரிவித்திருப்பதாவது, நான் உடல்நிலை சரியில்லாமல் இருந்த சமயத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டேன். அதில், ரஜினிகாந்த் சாரிடம் பண உதவி தருமாறு கேட்டு இருந்தேன். ரஜினி சார் அதன் பிறகு, என்னிடம் போன் செய்து பேசினார். எப்படி இருக்கீங்க? விஜயலட்சுமி என்று நலம் விசாரித்தார்.
ஆனால், நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள், பணத்திற்காக இப்படி எல்லாம் நான் செய்வதாக கூறினார்கள். அதுமட்டுமல்லாமல், விஜயலட்சுமியை வைத்து சீமானை அடிக்க ரஜினி நினைக்கிறார் என்றெல்லாம் கிளப்பிவிட்டார்கள் என தெரிவித்துள்ளார்.