தல அஜித்தின் மச்சானை காதலிக்கும் கவர்ச்சி நடிகை யாஷிகா ஆனந்தின் அம்மா, அப்பாவை பாத்திருக்கீங்களா?… இதோ பாருங்க …

தமிழ் சினிமாவில் நடிகை ஷாலினியின் தம்பி என்ற அடையாளத்துடனும், வளர்ந்து வரும் இளம்  நடிகராகவும் வலம் வருபவர் நடிகர் ரிச்சர்ட். இவர் நடிகர் அஜித்தின் மச்சான் என்பதும் அனைவரும் அறிந்ததே. 2002ல் அஞ்சலி படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் காதல் வைரஸ் படத்திலிருந்து நாயகனாக நடித்தார். இப்படம் எதிர்பார்த்த அளவுக்கு ரசிகர்களிடையே வரவேற்பு பெறவில்லை.

   

இதை தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான இன்னும் சில படங்களும் சரியான அங்கீகாரத்தை கொடுக்கவில்லை .இவர் தற்பொழுது நடிகை யாஷிகா ஆனந்த் காதலித்து வருவதாக கூறப்படுகிறது. இது தொடர்பான புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி வைரலானது  .

நடிகை யாஷிகா ஆனந்த் இவரைப் பற்றிய அறிமுகமே நமக்கு தேவையில்லை. அந்த அளவுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலமானவர். இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமானார். சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும்  ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை யாஷிகா ஆனந்த். இவர் தனது கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.

நடிகர் அஜித்தின் மச்சானான ரிச்சர்ட் ரிஷி சமீபத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் காதலிப்பதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்தார். இதை தொடர்ந்து தற்பொழுது இவர்கள் இருவரும் காதல் பறவைகளாக வலம் வந்து கொண்டுள்ளனர். நடிகை யாஷிகா ஆனந்த் தற்பொழுது தனது அம்மா மற்றும் அப்பா உடன் எடுத்துக் கொண்ட அழகிய புகைப்படத்தை இணையத்தில் பதிவு செய்துள்ளார். மேலும் அவர் தனது அப்பாவிற்கு தந்தையர் தினத்தை முன்னிட்டு தந்தையர் தின வாழ்த்துக்களையும் கூறியுள்ளார்.