நடிப்பதை தாண்டி பல விதமான பிஸ்னஸ்ஸில் அசத்தும் சீரியல் நடிகைகள்.

சின்னத்திரையில் ஒலிபரப்பாகும் சீரியல்களுக்கு என்று மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு உள்ளது சமீப காலமாக ஒவ்வொரு சேனலிலும் விதவிதமான கதைகளத்துடன் தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அந்தத் தொடர் மட்டுமல்லாமல் அந்தத் தொடரில் நடிக்கும் நடிகர் மற்றும் நடிகைகள் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளனர். அப்படி சின்னத்திரை சீரியல்களில் நடிக்கும்   நடிகைகள் தொழிலதிபராகவும் இருந்து வருகிறார்கள் அப்படி தொழிலதிபராக இருக்கும் நடிகைகளை பற்றி இதில் காண்போம்.

1.வனிதா:

   

நடிகர் விஜய் நடிப்பில் வெளியான ‘சந்திரலேகா’ என்ற படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமானவர்  நடிகை வனிதா. அதன் பிறகு ஒரு சில படங்களில் மட்டும் நடித்து அதன் பிறகு  சினிமாவில் இருந்து விலகி இருந்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஜய் டிவியில் சூப்பர் ஹிட் ஆக ஒளிபரப்பான ‘பிக் பாஸ் ‘ நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு  மக்கள் மத்தியில் மிகவும்  பிரபலமானார். அதன் பிறகு சீரியல், சினிமா, தொழில்கள் என கொடிகட்டி பறந்து வருகிறார். தற்போது இவர் பல தொழில்களை சொந்தமாக செய்து கொண்டு வருகிறார்.

2. மகேஸ்வரி;

விஜே வாக மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் தான் விஜே மகேஸ்வரி.  அதில் பிறகு  சின்னத்திரை சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார். இருந்தாலும் மக்கள் மத்தியில்  நல்ல வரவேற்பு கிடைக்கவில்லை . விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் போட்டியாளராக கலந்து கொண்டு  மக்கள் மத்தியில் மிகவும்  பிரபலமானார். இவர் தற்போது  நிகழ்ச்சியும் தொகுத்து வழங்கி வருகிறார். இவர் சீரியல் ,சினிமா மட்டுமல்லாமல் சொந்தமாக உணவகம், பொட்டிக்போன்ற தொழில்களை செய்து வருகிறார்.

3.ஸ்ரீ தேவி:

சின்னத்திரை சீரியல் நடித்து மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றவர்  நடிகை ஸ்ரீ தேவி  அசோக். இவர் சன் டிவி,  விஜய் டிவி,  பிறமொழி சேனல்களிலும் ஒளிபரப்பாகும் தொடர்களில் நடித்து வருகிறார் . தற்போது  விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் காற்றுக்கென்ன வேலி, பொன்னி
போன்ற  சீரியல்களில்  பிஸியாக நடித்து வருகிறார். இவர் சொந்தமாக சிறிய பேன்சி ஜுவல்லரி ஷாப் ஒன்றை வைத்து இருக்கிறார்.

4.சைத்ரா ரெட்டி:

ஜீ தமிழில் சூப்பர் ஹிட் ஆக ஒளிபரப்பான ‘யாரடி நீ மோகினி’ என்ற சீரியல் மூலமாக வில்லி கதாபாத்திரத்தில் நடித்த மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகை சைத்ரா ரெட்டி. இதை தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பாக சூப்பர் ஹிட் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ‘கயல்’ சீரியலில் ஹீரோனியாக நடித்து  வருகிறார். இவர்  படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். கடந்த ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான வலிமை படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் சொந்தமாக பியூட்டி பார்லர் ஒன்றை நடத்தி வருகிறார் .தற்போது சென்னையில் இவருடைய பியூட்டி பார்லரின் பல கிளைகள் இருக்கிறது.

5.ஸ்ருதிஹா:

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான முன்னணி நடிகைகள் ஒருவர் நடிகை ஸ்ருதிஹா. இவர் ஒரு சில படங்களில் மட்டும் நடித்திருந்தார். திருமணத்திற்கு பிறகு இவர் சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டு நிறுத்திவிட்டார்.  நீண்ட கால இடைவெளிக்கு பிறகு விஜய் டிவியில் சூப்பர் ஹிட் ஒளிபரப்பான ரியாலிட்டி  ஷோக்கலில் ஒன்று போட்டியாளராக கலந்து கொண்டு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றார். இந்நிகழ்ச்சிக்குப் பிறகு  சோசியல் மீடியா, நிகழ்ச்சி என்று பிஸியாகவே இருந்து கொண்டிருக்கிறார். இவர் அழகு சாதனத் துறையில் அதிக ஆர்வம் கொண்டவர். இதனால் காஸ்மெட்டிக்ஸ் சார்த்த தொழிலை செய்து  வருகிறார்   .