இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் 2015 ஆம் ஆண்டு வெளியான படம் ‘பாபநாசம்’. இப்படத்தில் ஸ்ரீ தேவி, கமலஹாசன், கௌதமி, கலாபவன் மணி, எம் எஸ் பாஸ்கர், நிவேதா தாமஸ், சார்லி, அபிசேக் வினோத், எஸ்தர் போன்ற பல பிரபலங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்தில் கமலஹாசனின் மூத்த மகள் கதாபாத்திரத்தில் நடித்த மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றவர் நடிகை நிவேதா தாமஸ். இவர் 1995 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார். தந்தை தாமஸ் தாய் லில்லி தாமஸ்.
சென்னையில் உள்ள ஹோலி ஏஞ்சல்ஸ் மற்றும் மான்ட்ஃபோர்ட் மெட்ரிகுலேஷன் பள்ளியில் பள்ளி படிப்பை முடித்தார். அதன் பிறகு SRM பல்கலைக்கழகத்தில் கட்டிடக்கலை இளங்கலைப் படித்தார்.
இவர் முதலில் 2001 ஆம் ஆண்டு ஒளிபரப்பான ராஜா ராஜேஸ்வரி என்ற சீரியல் மூலம் குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து மை டியர் பூதம், சிவமயம், அரசே, தேன்மொழியாள் போன்ற தொலைக்காட்சி சீரியல்களில் நடித்துள்ளார்.
2003 ஆம் ஆண்டு வெளியான ‘உத்தரா‘ என்ற மலையாளத் திரைப்படத்தின் மூலமாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதை தொடர்ந்து கண்ணா லட்டு தின்ன ஆசையா, குருவி போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.
அதை தொடர்ந்து 2011 ஆம் ஆண்டு வெளியான போராளி என்ற படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதை தொடர்ந்து தமிழில் நவீன சரஸ்வதி சபதம், ஜில்லா, தர்பார் போன்ற படங்களில் நடித்துள்ளார்.
இவர் சமீபத்தில் வெளியான ‘என்னடா சஜி’ என்ற மலையாள திரைப்படத்தில் நடித்துள்ளார். சோசியல் மீடியாவில் ஆக்டிவாக உள்ளவர். தற்போது இவரின் குடும்ப புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளது.