
இயக்குனர் சங்கரின் படங்கள் என்றாலே மிகவும் பிரம்மாண்டமாக இருக்கும். ஒவ்வொரு காட்சிகளையும் அவ்வளவு பிரம்மாண்டமாக செதுக்கியிருப்பார். தமிழ் திரையுலகில் முக்கிய இயக்குனராக வலம் வரும் அவரின் மகள் அதிதீசங்கர், நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான விருமன் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானார்.
அத்திரைப்படத்தில் ஒரு பாடலும் பாடியிருந்தார். மாடு குத்தி கிளிச்சாலும் என்ற அந்த பாடல் மக்களிடையே மிகவும் பிரபலமானது. அதனை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயனுடன், மாவீரன் திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில், தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செக்கச் செவேல் என்று சிவப்பு நிற உடையில் ஜொலிக்கும் கவுனை அணிந்து கொண்டு க்யூட்டாக போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதை பார்த்து, ரசிகர்கள் அழகிய செம்ம அழகாக இருக்கிறீர்கள்? என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.