
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தன் முன்னாள் கணவர் நடிகர் தனுஷ் குறித்து பெருமையாக பேசி இருக்கிறார். அவர் தெரிவித்திருப்பதாவது, அனிருத் என்னுடைய உறவுக்காரர் தான். எனினும், அவர் சினிமாவிற்கு வந்ததற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.
அதற்கு, முழு காரணம் தனுஷ் தான். அனிருத்தின் பெற்றோர் அவரை, சிங்கப்பூருக்கு அனுப்பி படிக்க வைக்க விரும்பினார்கள். தனுஷ் தான் அவர்களிடம் அனிருத்திற்கு நல்ல திறமை இருக்கிறது. கண்டிப்பாக முன்னேறுவார். என்னை நம்புங்கள் என்று கூறி கீபோர்டு எல்லாம் வாங்கி கொடுத்து ஊக்கப்படுத்தினார்.
அது மட்டுமல்லாமல், 3 திரைப்படத்தில் அவரை இசையமைப்பாளராக போடலாம் என்று என்னிடம் கேட்டு, அனிருத்தை அறிமுகப்படுத்தியவரும் தனுஷ் தான். அனிருத் திரையுலகிற்கு வருவதற்கு மிக முக்கிய காரணமாக இருந்தவர் தனுஷ். ஆனால், தற்போது அவர் வளர்ந்து பெரியாளாக உயர்ந்து நிற்பதற்கு தான் காரணம் அவரின் கடின உழைப்பு தான் என்று தெரிவித்திருக்கிறார்.