
திரைத்துறையை சேர்ந்த நடிகர் நடிகைகள் பலரும் வெளிநாடுகளில் வீடு வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். பல நடிகர்களுக்கு சென்னையை தவிர துபாய் போன்ற முக்கியமான இடங்களில் வீடு இருக்கிறது. விடுமுறை நாட்களில் குடும்பத்தினரோடு சென்று மகிழ்ச்சியாக வாழ்வதற்கென்றே பல நாடுகளில் வீடு வாங்குகிறார்கள்.
சமீபத்தில் நடிகர் சூர்யா குடும்பத்திருடன் மும்பையில் வீடு வாங்கி குடிபெயர்ந்து விட்டார். அவ்வப்போது படப்பிடிப்பிற்காக அவர் சென்னை வந்து சென்று கொண்டிருக்கிறார். இந்நிலையில், நடிகர் அஜித் ஏற்கனவே துபாயில் அழகான வீடு ஒன்று வாங்கி இருப்பதாக கூறப்பட்டது.
அந்த பகுதியே மிக அழகாக சொர்க்கம் போல் காட்சியளிக்குமாம். எப்போதாவது சென்று வருவதற்கு இவ்வளவு அழகான வீடா என்று பலரும் ஆச்சர்யப்பட்டனர். இந்நிலையில், வலைப்பேச்சு அந்தணன் அஜீத் மற்றொரு வீட்டை துபாயில் வாங்கியிருப்பதாக தகவல் தெரிவித்திருக்கிறார்.
அவர் கூறியிருப்பதாவது, நடிகர் அஜித் ஏற்கனவே துபாயில் முக்கியமான இடத்தில் பெரிய வீடு ஒன்றை வாங்கி இருந்தார். இந்நிலையில், தற்போது மீண்டும் துபாய் மெரினாவில் மற்றொரு வீட்டை வாங்கியிருக்கிறார். எப்போதாவது சென்று வருவதற்கு ஒரு வீடு இருந்தால் போதும். ஒரு வேளை அவர் அங்கேயே தங்கி விடப் போகிறாரா? என்று தெரிவித்துள்ளார்.