விஜய் மட்டும்தா அப்டி பண்ணுவாரா?… காதலனுடன் லிப்லாக்… 2-வது திருமணத்திற்கு ரெடியான பிரபல நடிகை…!

நடிகை அமலாபால், ஹரிஷ் கல்யாண் நடித்த சிந்து சமவெளி என்ற திரைப்படத்தின் மூலம், தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். அதன்பிறகு, விதார்த் நடிப்பில் வெளியான மைனா திரைப்படத்தின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார். அதனைத்தொடர்ந்து, முன்னணி நடிகர்களுடன் நடித்த அவரின் மார்க்கெட் ஏறுமுகமாக இருந்தது.

   

அந்த சமயத்தில், இயக்குனர் ஏ.எல் விஜயை காதல் திருமணம் செய்தார். சில மாதங்களில் இருவரும் விவாகரத்து செய்து பிரிந்துவிட்டனர். அதன்பிறகு, ஏ.எல் விஜய் இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். எனவே, பலரும் அமலா பால் மட்டும் ஏன் திருமணம் செய்துகொள்ளவில்லை என்று கேட்டு வந்தனர்.

விவாகரத்துக்கு பிறகு மகிழ்ச்சியாக திரைப்படங்களில் நடித்து வந்த அமலா பால், தற்போது தன் நண்பர் ஜகத் தேசைய் காதலித்து கொண்டிருக்கிறார். தன் பிறந்தநாளான இன்று அவருடன் பார்ட்டி கொண்டாடியிருக்கிறார். அப்போது, இருவரும் முத்தமிட்டுக்கொண்டனர். அதனைத்தொடர்ந்து, ஜகத் அமலா பாலிற்கு மோதிரம் மாட்டியிருக்கிறார்.

அதன்பிறகு, மது அருந்துகிறார்கள். அமலா பால் வெளியிட்ட இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.எனவே, ஏ.எல் விஜய்யை தொடர்ந்து, அமலா பாலும் இரண்டாவது திருமணத்திற்கு தயாராகி விட்டார்.