இயக்குனருடன் காதலில் விழுந்த அம்மு அபிராமி… புகைப்படத்தை வெளியிட்ட நண்பர்கள்..

விஜய் டிவியில் சூப்பர் டூப்பர் ஹிட் ஆக வருடம் வருடம் ஒளிபரப்பாகி மக்கள் மனதை கவர்ந்த ரியாலிட்டி ஷோ தான் ‘குக் வித் கோமாளி ‘.இந்த ஷோவில் 2022 ஆம் ஆண்டு ‘குக் வித் கோமாளி சீசன் 3’  போட்டியாளராக கலந்து கொண்டவர் தான் நடிகை அம்மு அபிராமி. இவர் இந்நிகழ்ச்சியின் இரண்டாவது  ரன்னரப்பாக  தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிகழ்ச்சியின் மூலம் அம்மு அபிராமி பிரபலமானவர். அதைத் தொடர்ந்து ராட்சசன், அசுரன் உள்ளிட்ட படங்களில்  நடித்துள்ளார். தற்பொழுது ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.

   

இந்நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இயக்குனர் பார்த்திபன் உடன் அம்மு அபிராமி காதலில் இருப்பதாக கூறப்படுகிறது.சமீபத்தில் அம்மு அபிராமி பிறந்த நாளை கொண்டாடிய போது பார்த்திபன் அவருக்கு வாழ்த்து தெரிவித்த புகைப்படம் தான் தற்போது இணையத்தில்  வைரலாகி வருகிறது.அதில்பிறந்தநாள் வாழ்த்துக்கள் அபிராமி, எப்போதும் சந்தோஷமாக இரு, உன்னை போன்ற இனிமையான ஆன்மாவுக்கு புன்னகை நிறைந்த பலர் வாழ்த்துவார்கள்”  என்று கூறியுள்ளார்.

இதற்கு  அம்மு அபிராமி நன்றி என்று கூறியுள்ளார்.இந்த இரண்டு பதிவுகளையும் சிவாங்கி மற்றும் குரேஷி ஆகியோர்  ஒரு மாறி மாறி கலாய்க்கும் நிலையில் இருவருக்கும் இடையே காதலா?. என்று நொட்டிசன்  இடையே கேள்வி எழுப்பி  வருகின்றனர்.  இது குறித்து விரைவில் இருவரும் விளக்கம் அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.