கேப்டனுக்கு பிரியாவிடை கொடுத்த அமுல் நிறுவனம்…. உருக்கமான கார்ட்டூன் புகைப்படம்…!

முன்னணி நடிகரும், அரசியல் தலைவருமான கேப்டன் விஜயகாந்த் அவர்கள் கடந்த வியாழக்கிழமை அன்று காலையில் உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். மருத்துவமனையிலிருந்து எடுத்து வரப்பட்ட அவரின் உடல் சாலி கிராமத்தில் உள்ள வீட்டில் சில மணி நேரங்கள் வைக்கப்பட்டிருந்தது.

   

அதன் பிறகு, அங்கிருந்து கோயம்பேட்டில் இருக்கும் தேமுதிக அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு அவரின் உடலுக்கு ரசிகர்கள், பொதுமக்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் அஞ்சலி செலுத்தினர். கூட்டம் கட்டுக்கடங்காமல் அதிகரித்ததால் காவல்துறையினர் கட்டுப்படுத்த முடியாமல் தவித்தனர்.

இரவு வரை மக்கள் அஞ்சலி செலுத்தினர். அதன் பிறகு, தேமுதிக அலுவலகத்திற்கு கேப்டனின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து, அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில், கேப்டனுக்கு மரியாதை செலுத்தும் விதமாக அமுல் நிறுவனம் கேப்டன் உருவத்தில் கார்ட்டூனை  வெளியிட்டிருக்கிறது. அதில், குட்பாய் கேப்டன் என்று எழுதியுள்ளனர்.