தமிழும் சரஸ்வதியும் சீரியல் நடிகைக்கு நிச்சயதார்த்தமா… இணையத்தில் ட்ரெண்டாகும் புகைப்படங்கள்..

விஜய் டிவியில் சூப்பர் ஹிட் ஆக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சீரியல் தான் தமிழும் சரஸ்வதியும்.

   

 

இந்த சீரியலானது அழகான ஒரு கூட்டு குடும்பத்தில் நிகழும் பிரச்சனைகளும் மகிழ்ச்சியையும் பற்றி  இந்த சீரியலில் கூறப்படுகிறது.

இந்த சீரியலில் சமீபத்தில்  இளம் பிஸினஸ் வுமன் மேக்னா கேரக்டரில் நடித்தவர் தான்  நடிகை அக்ஷிதா.இவர் சன் டிவியில் ஒளிபரப்பான அழகு மற்றும் சுமங்கலி சீரியல் நடித்து பிரபலமானார்.

 

அதைத் தொடர்ந்து ‘கண்ணான கண்ணே’ சீரியலில் கதாநாயகியின் தங்கையாக நடித்துள்ளார். இந்த சீரியல் மூலம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தார்.இந்த சீரியல் முடிவுக்கு வந்த நிலையில் ஜீ தமிழில் ஒளிபரப்பான ‘சீதா ராமன்’  சீரியலில் சீதாவின் அக்கா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

தமிழும் சரஸ்வதியும் மேக்னா கேரக்டரில்  ஒரு சில எபிசோடுகள் நடித்தார்.சீரியல் நடிகையான அக்ஷிதா சோசியல் மீடியாவில் மிகவும் இருக்கக் கூடியவர். தற்போது நடிகை அக்ஷிதா ப்ரீத்தம் சுரேஷ் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது.

ரீத்தம் சுரேஷ்   பெங்களூரைச் சேர்ந்தவர். இவர்  நடிகரும் கூட. தற்போது நிச்சயதார்த்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.