
இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 1996-ஆம் வருடத்தில் வெளியான அவ்வை சண்முகி திரைப்படம் ரசிகர்களிடையே அதிக வரவேற்பை பெற்றது.
அத்திரைப்படத்தை எத்தனை முறை வேண்டுமானாலும் பார்ப்பதற்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. அதில், கமல்ஹாசனின் மகளாக நடித்திருந்த குழந்தையின் துடுக்கான பேச்சு, சிரிப்பு மற்றும் நடிப்பு திறன் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறது.
இந்நிலையில், குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்த ஆன் அன்ராவின் சமீபத்திய புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஆச்சர்யமடைந்திருக்கிறார்கள். தற்போது அவருக்கு 33 வயது ஆகிறது. தன் சமீபத்திய புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டு இருக்கிறார். அதில் கவர்ச்சிகரமான உடை அணிந்து ஸ்டைலாக போஸ் கொடுத்திருக்கிறார். அந்த புகைப்படம் இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.