விஜய் ஆண்டனி மகள் மீராவை பற்றி பேசிய பயில்வான்…. வெளியான தகவல்…ஆண்டவனுக்குத் தான் வெளிச்சம்…

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர் மற்றும் நடிகருமான விஜய் ஆண்டனி மகள் மீரா எதிர்பாராத வண்ணமாக தற்கொலை செய்து கொண்டார். இந்த இறப்பானது ரசிகர் மத்தியின் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. 16 வயது நிரம்பிய மீரா 12 ஆம் வகுப்பு படித்து வரும் நிலையும் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியானது.

   

இந்த சூழலில் மீராவின் இறுதி அஞ்சலிக்கு வந்த பலர் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ள வேண்டாம் என்று பல அறிவுரைகள் கூறியிருந்தார்கள். இந்நிலையில் சினிமா விமர்சகர் பயில்வான் ரங்கநாதன் மீராவை பற்றிய விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். அதாவது தனிப்பட்ட முறையில் விஜய் ஆண்டனி மற்றும் பாத்திமாவை தனக்கு நன்கு தெரியும் என்று கூறி இருக்கிறார்.

அதுவும் பாத்திமா ஆரம்பத்தில் தொகுப்பாளராக சன் டிவியில் வேலை பார்த்திருக்கிறார். அப்போது என்னையும் பேட்டி எடுத்துள்ளார். விஜய் ஆண்டனி, பாத்திமா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவருக்கு மீரா மற்றும் லாரா என்ற இரண்டு மகள்கள் உள்ளார்கள். பொதுவாக சினிமாவில் உள்ள பெரிய நட்சத்திரங்களான ரஜினி, கமல் போன்றவர்களுக்கு இரண்டு மகள்கள் தான்.

அதேபோல் விஜய் ஆண்டனிக்கும் இரண்டு மகள்கள். ஆனால் மீரா என்பது சுத்த தமிழ் பெயர். ஆனால் விஜய் ஆண்டனி கிறிஸ்டின் என்பதால் கிறிஸ்துவ முறைப்படி தான் பெயர் வைப்பார்கள். ஆனால் அவரது மகளுக்கு ஏன் மீரா என்று பெயர் வைத்தார் என தெரியவில்லை. மேலும் கடந்த ஒரு வருடங்கள் ஆகவே மீரா மன உளைச்சலில் இருந்ததால் அவரது வீட்டில் அருகில் உள்ள சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு இருக்கிறார்.

இதற்கான மாத்திரை அவரது ரூமில் இருந்திருக்கிறது. அதுவும் இரவு ஒரு மணிக்கு மாத்திரையை போட்டுவிட்டு தண்ணீர் குடித்த பிறகு தான் தூங்க சென்றிருக்கிறார். தற்கொலை என்பது இரண்டு அல்லது மூன்று நிமிடங்களில் வந்து போகும் விஷயம்தான். அதை நாம் கடந்து விட்டால் அதன் பிறகு வெற்றி தான். ஆனால் மீராவால் அதை எதிர்கொள்ள முடியவில்லை என பயில்வான் கூறியிருக்கிறார்.