
நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் திரை பிரபலங்களின் சொந்த வாழ்க்கையில் நடக்கும் விஷயங்கள் குறித்து பகிரங்கமாக பேசி அவ்வபோது சர்ச்சைகளை கிளப்பிவிடுவார். அது மட்டுமல்லாமல் பல நடிகர்களுடைய அந்தரங்க விஷயங்கள் பற்றியும் பேசுவார்.
அந்த வகையில், தற்போது நடிகைகளிடம் படப்பிடிப்பு தளங்களில் சில்மிசம் செய்த நடிகர்கள் பற்றி பேசி பரபரப்பை கிளப்பியுள்ளார். அவர் தெரிவித்ததாவது, கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடிகை பிரியங்கா மோகன் நடித்த போது நடிகர் தனுஷ் அவரிடம் பல வகைகளில் சில்மிஷம் செய்துள்ளார்.
பிரியங்கா மோகன், பெரிய நடிகர் என்பதால் வேறு வழியின்றி பொறுத்துக் கொண்டார். எனவே, தன் அடுத்த திரைப்படத்திலும் பிரியங்கா மோகன் தான் நடிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார் என தெரிவித்துள்ளார். அடுத்ததாக காஜல் அகர்வால், தெலுங்கு திரைப்படத்தில் நடித்த போது பாலகிருஷ்ணா அவரிடம் சில்மிஷம் செய்ததாக கூறியுள்ளார்.
அதேபோல் கவர்ச்சி நடிகை சொர்ணா பார்ட்டிக்கு சென்ற போது வெங்கட் பிரபு, எஸ்.பி சரண் போன்ற பலர் அங்கு இருந்துள்ளனர். அதில், எஸ்.பி.சரண் அவரிடம் தவறாக நடந்து கொண்டதாக புகார் கொடுத்தார். உடனே, அதனை வெளியில் தெரியாமல் மறைத்து விட வேண்டும் என்று எஸ்.பி சரண் மன்னிப்பு கேட்டு சரி செய்து விட்டார் என கூறியுள்ளார். மேலும், விருமாண்டி படத்தில் நடித்த அபிராமியை கமல் பாடாய் படுத்தியதில் அவர் வெளிநாட்டுக்கே ஓடிவிட்டார் என தெரிவித்துள்ளார்.
மேலும் நடிகை ராதிகா ஆப்தேவிடம் படப்பிடிப்பு தளத்தில் நடிகர் அஜ்மல் தவறாக நடந்து கொண்டிருக்கிறார். அவரை கடுமையாக திட்டிய ராதிகா ஆப்தே இயக்குனரிடம் புகார் அளித்து விட்டார். இயக்குனரும் அவரை அழைத்து திட்டிஇருக்கிறார். மேலும், தன்னைவிட அதிக சம்பளம் பெறும் நடிகை என்பதால் அஜ்மல் அமைகியாக மன்னிப்பு கேட்டுவிட்டு மீண்டும் படப்பிடிப்பை தொடங்கியுள்ளதாக பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.