
நடிகை நதியா 80 மற்றும் 90களில் பிரபல நடிகையாக வலம் வந்தார். அவரின் ஸ்டைல் மற்றும் அழகு ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. நதியா என்றாலே அவரின் இளமை தான் நினைவுக்கு வருகிறது. அந்த அளவிற்கு தற்போது வரை இளமை மாறாமல் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறார்.
பெரும்பாலும் திருமணம் மற்றும் குழந்தைகள் என்று ஆனப் பிறகு நடிகைகள் எடை கூடிய நிலையில் காணப்படுவார்கள். அவரின் காலகட்டத்தில் கலக்கி வந்த நடிகைகள் பலர் இன்று அப்படி தான் இருக்கிறார்கள். ஆனால், நதியா தான் கதாநாயகியாக நடித்த காலகட்டத்தில் எப்படி இருந்தாரோ, அதேபோன்றுதான் தற்போது வரை இருக்கிறார்.
இந்நிலையில், நதியா குறித்த தகவல் ஒன்றை பத்திரிகையாளரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் பகிர்ந்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது, நடிகை நதியாவிற்கு கருப்பான நடிகர்களை பிடிக்காது. ரஜினியுடன் அவர் ராஜாதி ராஜா திரைப்படத்தில் நடிக்க காரணம் அவர் நிர்பந்திக்கப்பட்டார்.
ரஜினியுடன் நடிக்கவில்லை என்றால், நம்மால் முன்னேற முடியாது என்று அவருடன் நடித்து விட்டார். அதனைத்தொடர்ந்து விஜயகாந்துடன் நடிக்க அவருக்கு வாய்ப்பு வந்தபோது அவர் நடிக்கமறுத்துவிட்டார். இதனால், அவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில், விஜயகாந்த் கேரளாவில் நாட்டியத்தில் சிறந்து விளங்கிய சோபனாவை தன்னுடன் நடிக்க வைத்தார் என்று தெரிவித்துள்ளார்.