‘பிக் பாஸ்’ போட்டியாளர் ஷெரினாவின் அழகிய குடும்ப புகைப்படங்கள்…

சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களுக்கு என்று  மக்கள் மத்தியில்  மிகுந்த வரவேற்பு உள்ளது. அந்த வகையில்  விஜய் டிவியில் சூப்பர் ஹிட் ஆக ஒளிபரப்பான ரியாலடி ஷோக்களில்  ஒன்று ‘பிக் பாஸ் ‘.

   

‘பிக் பாஸ்’ 1 முதல் 6 சீசன்கள் வரை பிரபலம் முன்னணி நடிகர் கமலஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கினார். ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியானது சீசன் 6 முடிந்துள்ளது. பிக் பாஸ்  சீசன் 6 ல் போட்டியாளராக மைனா,  நந்தினி,  அமுதவாணன்,  கதிரவன்,  ஏ டி கே, ரட்சிதா,  மணிகண்டன்,  தனலட்சுமி ,  ஜனனி,  ஆயிஷா, முத்து, ஷெரினா போன்ற பல பிரபலங்கள் இப்போட்டியில் கலந்து   கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் பங்கு பெற்று  மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றவர்.  மாடலிங் ஷெரினா. இவர் கேரளாவை பூர்வீகமாகக் கொண்டவர். ஆனால் இவர் பிறந்து வளர்ந்தது எல்லாம் பெங்களூர். இவர் தந்தை சாம் சைமன் , தாய் சாலி சாம்.ஷீபா சாம் என்ற  தங்கையும் உள்ளார்.

இவர் சர்வதேச அளவில் நடக்கும் மாடல் சோக்களில் கலந்து கொண்டு  Ford Super Model of India world படத்தை வென்றார். அதை தொடர்ந்து  பல அழகிப் போட்டிகளில் கலந்துகொண்டு பட்டமும் வென்றுள்ளார்.  அதன் பிறகு மாடலிங் , விளம்பரம் என்று பிசியாக இருந்து வந்தார்.  இவர் சென்னை சில்க்ஸ், மலபார் கோல்டு, போத்தீஸ் உள்ளிட்ட பல விளம்பரங்களில் நடித்துள்ளார் .

இவர் விளம்பரங்களில் நடித்ததை பார்த்து இயக்குனர் மற்றும் நடிகரான சமுத்திரக்கனி இவருக்கு’ விநோதய சித்தம்’ என்ற  படத்தில் நடிக்க  வாய்ப்பு கிடைத்தது. இப்படம் கடந்த ஆண்டு வெளியானது.

ஷெரினா சாய்ராம் மோட்டார்ஸ் என்ற ஒரு நிறுவனத்தை பெங்களூரில் நடத்தி வருகிறார். மேலும், UVI என்ற ஸ்டூடியோ ஒன்றையும் நடத்தி வருகிறார். இவர் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக உள்ளவர். தற்போது இவர் தன் குடும்பத்துடன் இருக்கும் புகைப்படமானது இணையத்தில் வெளியாகியுள்ளது.