
சன் டிவி என்றால் மக்கள் மத்தியில் ஒரு மிகுந்த வரவேற்பு உள்ளது.சன் டிவி யில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு என்ன ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது.அந்த வகையில் சன் டிவி தொலைக்காட்சியில் சூப்பர் ஹிட் ஆக ஒளிபரப்பாகும் சீரியல்தான் ‘எதிர்நீச்சல்’.
இந்த சீரியலை திரு செல்வம் அவர்கள் இயக்கி வருகிறார். இந்த சீரியல் ஒளிபரப்பாகி சிறிது காலத்திலேயே அதிகமான ரசிகர் பட்டாளத்தை பெற்றுள்ளது.
இந்த சீரியலா முழுக்க பெண்களை மட்டுமே மையப்படுத்தி ஆணாதிக்கம் உள்ள ஒரு குடும்பத்தில் ஒரு பெண் எப்படி எல்லாம் கஷ்டப்படுகிறாள் என்பதை பற்றியும்,
அதிலிருந்து அவள் எப்படி வெளி வருகிறாள் போன்ற விஷயங்களைப் இந்த சீரியல் காட்டப்படுகிறது.இந்த சீரியலானது இல்லத்தரசிகளின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது.
இந்த சீரியலில் விசாலாட்சி கதாபாத்திரத்தில் மாமியாராக நடிப்பவர்தான் சத்யபிரியா.இவரின் மூத்த மகனார் விசாலாட்சியின் மூத்த மகனாக குணசேகரன் கதாபாத்திரத்தில் நடிப்பவர் மாரிமுத்து.
இரண்டாவது மகனாக ஞானசேகர் என்ற கதாபாத்திரத்தில் நடிப்பவர் தான் கமலேஷ் மூன்றாவது மகனாக கதிர்வேல் கதாபாத்திரத்தில் நடிப்பவர்தான் விபு ராமன்.
இதில் ஞானசேகரின் மனைவியாக ரேணுகா என்ற கதாபாத்திரத்தில் நடிப்பவர் நடிகை பிரியதர்ஷினி .இவர் ஒரு பிரபல தொகுப்பாளனி.சன் டிவி , விஜய் டிவி, ஜீ தமிழ், கலைஞர் டிவி, சூர்யா டிவி போன்ற பல டிவிகளில் தொகுப்பாளனியாக பணியாற்றியுள்ளார்.
இதை தொடர்ந்து தாவணி கனவுகள் ,காவல் கைக்கடிகள் ,நாகம் ,தெலுங்கில் நாக தேவதை,குற்றவாளிகள், இந்தியா கோவில் ,உயிரே உனக்காக, இதயத்தை திருடாதே
போன்ற படங்களில் நடித்துள்ளார். மானாட மயிலாட, பாய்ஸ் Vs கேள்ஸ் போன்ற நடன நிகழ்ச்சியில் பங்குபெற்றார்.
நடிகை பிரியதர்ஷினி ரமணா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார்.இவர் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக உள்ளவர். இவர் மாலத்தீவிற்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு மாடர்ன் ட்ரெஸ்ஸில் வித விதமாக எடுத்த புகைப்படத்தை அவரே இணையத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படமானது வைரலாகி வருகிறது