‘கற்க கசடற’ பட நடிகர் விக்ராந்தின் அழகிய குடும்ப புகைப்படங்கள்

இயக்குனர்  ஆர். வி. உதயகுமார் இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளியான படம் ‘கற்க கசடற’. இப்படத்தில் விக்ராந்த், லட்சுமி ராய்,  தியா,  வடிவேலு போன்ற பிரபலங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.  இப்படத்திற்கு இசையமைப்பாளர் பிரயோக் இசையமைத்துள்ளார்.

   

இப்படத்தில் ராகுல் என்ற கதாபாத்திரத்தில் நடித்த மக்கள் மத்தியில்  பிரபலமானவர்  நடிகர் விக்ராந்த். இவர் சென்னையைச் சேர்ந்தவர். இவரது தந்தை சிவா தாய்  ஷீலா இவர் ‘பாண்டிய ஸ்டோர்ஸ்’  சீரியலில் லட்சுமி என்ற அம்மா கதாபாத்திரத்தில் நடித்தார்.

இவர் சென்னையில் உள்ள லயோலா கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் படித்தார். இவர் 1991 ஆம் ஆண்டு வெளியான ‘அழகன்’ என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார்.  இவர் தமிழில்  கற்க கசடற , நினைத்து நினைத்து பார்த்தேன்,

முதல் கனவே, நெஞ்சத்தை கிள்ளாதே, எங்க ஆசான், கோரிப்பாளையம், முத்துக்கு முத்தாக, சட்டப்படி குற்றம், பாண்டியநாடு, பக்ரீத் போன்ற படங்களில்  நடித்துள்ளார்.

2021 ஆம் ஆண்டு ஜீ தமிழில் ஒளிபரப்பான சூப்பர் ஹிட்  ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று ‘SURVIVOR’ இந்நிகழ்ச்சியில்  போட்டியாளராக பங்கேற்றார்.  நடிகர் விக்ராந்த்  நடிகை மானசா  என்பவரை 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு விவின் விநாயக் மற்றும் யாஷ் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.  இவர் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக உள்ளவர். தற்போது இவரின் குடும்ப புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளது.