”கையில் கிளாஸ்.. டேபிளில் சைடிஷ்”… புகைப்படம் வெளியிட்டு மாட்டிக்கொண்ட விஜே மகேஸ்வரி…

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் விஜே மகேஸ்வரி. விஜேவாக செயல்பட்ட இவர் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். சில சீரியல் களிலும் நடித்துள்ளார். இதன் மூலமே இவருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

   

சன் நியூஸ் மற்றும் இசையருவி போன்ற தமிழ் சேனல்களில் தொகுப்பாளராக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தார். வெள்ளித்திரையில் ‘குயில்’ படம் மூலமாக அறிமுகமானார். இவர் சமீபத்தில் வெளியான ‘விக்ரம்’ படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

இதை தொடர்ந்து இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் மிகப் பிரபலமானார் . தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்துவிட்டு தற்பொழுது தனியாக தனது மகனுடன் வசித்து வருகிறார் மகேஸ்வரி.

சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் மகேஸ்வரி. இவர் தற்பொழுது இவர் கையில்  ஜூஸ் ஒன்றை குடிப்பது போல புகைப்படத்தை இணையத்தில் பதிவு செய்துள்ளார்.

ஆனால் இதனை ‘கல்லு என்னும் சரக்கு’ என்று ரசிகர்கள் கமெண்ட் பக்கத்தில் கூறி வருகின்றனர். இது சரக்கா அல்லது வெறும் ஜூஸ் தானா என்பது மகேஸ்வரிக்கு மட்டுமே தெரியும். தற்போது இப்புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பேசு பொருளாகியுள்ளது.