விஜய்க்காக காத்திருந்த விருது… கடைசி நேரத்துல தனுஷ் கைக்கு மாறியது எப்படி…? வெளிவந்த தகவல்…!

வலைப்பேச்சு பிஸ்மி பேட்டி ஒன்றில் தெரிவித்திருப்பதாவது, டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகையில் இருந்து சிறந்த நடிகருக்கான விருது தளபதி விஜய்க்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. அதற்காக அவரை சந்தித்து நேர்காணல் எடுத்து ஒரு பக்கத்தில் போட வேண்டும். விஜய்யை அவர்களால் நேரடியாக சந்திக்க முடியாததால் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமாரை அணுகி இருக்கிறார்கள்.

   

விஜய்யிடம் பேட்டி எடுக்க அனுமதி வாங்கி தருமாறு கேட்டிருக்கிறார்கள். முதலில் முயற்சி செய்கிறேன் என்று கூறியிருக்கிறார். அவரால் சந்திக்க முடியவில்லை. எனவே, நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள் என்று கூறிவிட்டாராம். அதன் பிறகு அந்த பத்திரிக்கையில் சிறந்த நடிகராக தனுஷ் தேர்ந்தெடுக்கப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.

மேலும், அவரின் பேட்டியும் இடம்பெற்றிருக்கிறது. இதனைப்பார்த்த, ஜிவி பிரகாஷ் குமார் கோபம் அடைந்திருக்கிறார். அதற்குள் எப்படி சிறந்த நடிகரை மாற்ற முடியும்? இது எச்ச வேலை. என்னிடம் தான் விஜய் சிறந்த நடிகராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் என்று கேட்டுவிட்டு இன்று இவரை போட்டு இருக்கிறார்கள் என்று தனுஷை தாக்கி கருத்து பதிவிட்டார். இதனால் தான் தனுஷ் மற்றும் ஜிவி பிரகாஷ் இடையே மோதல் உருவானது என்று வலைப்பேச்சு பிஸ்மி தெரிவித்துள்ளார்.