என்னது.? பிரேம்ஜி பாடகரா..? ஹிட் அடிச்ச இந்த பாடல்கள் எல்லாம் அவர் பாடுனதா..? இது தெரியாம போச்சே..!

இயக்குனர் வெங்கட் பிரபு திரைப்படங்களில் எல்லாம் தவறாமல் இடம்பெற்றுவிடுவார் அவரின் தம்பி பிரேம்ஜி. அவர் நடிக்காத வெங்கட் பிரபு திரைப்படங்களை இல்லை என்று கூறலாம். அந்த அளவிற்கு, அண்ணனின் படங்களில் மட்டுமே நடித்து பிரபலமானவர் பிரேம்ஜி. நடிகராக மட்டுமல்லாமல் பாடகர், மியூசிக் கம்போசராக கலக்கியிருக்கிறார் பிரேம்ஜி.

   

அந்த வகையில் திருப்பாச்சி திரைப்படத்தில் வரும் கண்ணும் கண்ணும் என்ற பாடலின் இடையில் வரும் ராப் வரிகளை பிரேம்ஜி தான் பாடியிருப்பார். மேலும், மங்காத்தா திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் ஆடாம ஜெயிச்சோமடா பாடலின்  சில வரிகளை பிரேம்ஜி தான் பாடியிருக்கிறார்.

ஆர்யாவின் பிரபல பாடலான தீப்பிடிக்க தீப்பிடிக்க பாடல் மற்றும் சத்யம் திரைப்படத்தில் வரும் ஒரு பாடலும் பாடியிருக்கிறார். அது மட்டுமல்லாமல், சேட்டை திரைப்படத்தில் வரும், நீ தான்டி ஒஸ்தி பொன்னா? என்ற பாடல் உட்பட பல பாடல்களை பிரேம்ஜி பாடியுள்ளார்.