
பிக் பாஸ் நிகழ்ச்சி

மேலும் இந்நிகழ்ச்சி முதன்முதலாக அமெரிக்காவில் தான் தொடங்கப்பட்டது. பின்னர் இது அப்படியே இந்தி, மராத்தி, கன்னடம், மலையாளம், தமிழ் என பல மொழிகளிலும் ஆரம்பமானது. இந்த நிகழ்ச்சியின் நோக்கம் 100 நாட்கள் ஒரே வீட்டில் டிவி, செல்போன் போன்ற எந்தவொரு தொடர்பு சாதனமும் இல்லாமல் மக்களின் வாக்குகளை வைத்து தாக்குபிடிக்க வேண்டும் என்பது ஆகும்.
அவ்வாறு இறுதி போட்டி வரை வந்து வாக்குகளின் அடிப்படையில் வெற்றியாளராக முடிசூடிவார்கள். இதுபோல தமிழில் 6 சீசன்கள் முடிந்து விட்ட நிலையில், தற்போது பிக்பாஸ் 7 நிகழ்ச்சியானது இந்த மாதம் ஆரம்பிக்கப்படும் என கூறப்படுகிறது.
எப்போது ஆரம்பம்
இந்நிலையில் இம்மாதம் ஆரம்பிக்கப்படும் என முன்பு தெரிவித்த நிலையில், அடுத்த மாதம் தொடங்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ ஷூட் ஏற்கனவே முடிவடைந்துவிட்டது. எனவே இதனை இந்த மாத இறுதியில் வெளியிட முடிவு செய்துள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.