
பிக் பாஸ் நிகழ்ச்சி

கடந்தாண்டு நடைபெற்ற பிக் பாஸ் சீஸனின் போதே இனி நடிகர் கமல்அடுத்தடுத்து பல படங்களில் நடிக்க கமல் கமிட்டாகியுள்ளார் மற்றும் அரசியலிலும் ஈடுபட்டு வருவதால் அவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க நேரம் இருக்காது. எனவே இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்க மாட்டார் என ஒரு சில தகவல்கள் வந்த நிலையில், இந்த வதந்திக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இந்த சிசனையும் உலகநாயகன் தான் தொகுத்து வழங்க இருக்கின்றார் என்று வந்த தகவல் ரசிகர்களை உற்சாகமாக்கியுள்ளது.
புது மாற்றங்கள்
இதைத்தொடர்ந்து அடுத்த மாதம் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தொடங்க இருப்பதாகவும், அதற்கான ப்ரோமோ ஷூட் சமீபத்தில் நடந்து முடிந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதில் போட்டியாளர்கள் இரு குழுவாக பிரிந்தும் இரண்டு வீடுகளிலும், சில நாட்களுக்கு பின் ஒரே வீட்டில் தங்கியும் விளையாடுவதாக என ஒரு தகவல் தற்போது வந்துள்ளது. மேலும் இது போன்ற பல மாற்றங்களை இந்த சீசனில் பிக் பாஸ் குழு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
எனவே இந்த மாற்றங்கள் எல்லாம் இந்நிகழ்ச்சியின் மீதான சுவாரஸ்யத்தை அதிகப்படுத்தி ரசிகர்களை மேலும் கவர்ந்திழுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அந்த வகையில் மிக விரைவில் பிக் பாஸ் சீசன் 7, தொடங்குவதை பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.