பிரபலத்தின் குழந்தைகளுடன் விளையாடும் நடிகை சமந்தா… வைரலாகும் கியூட் வீடியோ…!!

நடிகை சமந்தா

தமிழ் சினிமாவின் பிரபல நடிகையாக வலம் வந்தவர் நடிகை சமந்தா. இவர் தமிழ், தெலுங்குத் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் ஆரம்ப காலத்தில் ரூ. 500 சம்பளத்துடன் மாடலிங் துறையில் சம்பாதிக்க தொடங்கினார். பின் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என சமந்தாவின் திரைப்பயணம் உச்சத்தை எட்டி வருகிறது. பிறகு தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நடிகர் நாக சைதன்யாவும் நடிகை சமந்தாவும், காதலித்து வந்தனர்.

   

பின்பு இருவீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து கடந்த 2021 ஆம் ஆண்டு இருவரும் கருத்து வேறுபாட்டால் திருமண பந்தத்தில் இருந்து பிரிந்துவிட்டதாக கூட்டாக அறிவித்தனர். அவர் விவாகரத்து பெற்ற பிறகு சினிமாவில் முழுவீச்சில் நடித்து வந்த நிலையில், மேலும் சினிமாவை தாண்டி சொந்தமாக நிறைய தொழில்களையும் செய்தார். பின் மயோசிட்டிஸ் என்ற நோயால் கடந்த வருடம் பாதிக்கப்பட்டு வெளிநாட்டில் சிகிச்சை பெற்று வந்தார்.

கியூட் வீடியோ

தற்போது சமந்தா நடித்து வந்த படங்களை எல்லாம் முடித்துக் கொடுத்துவிட்டு சினிமாவில் இருந்து பிரேக் எடுத்துக்கொண்டிருக்கிறார். அதற்காக அவர் அடுத்து நடிக்க வாங்கி இருந்த அட்வான்ஸ் பணத்தையும் திருப்பி கொடுத்துவிட்டார் என கூறப்படுகிறது. முதலில் ஆன்மீக பயணம், பின் தோழிகளுடன் வெளிநாட்டு பயணம் என நேரத்தை செலவிட்டு வருகிறார். இந்நிலையில் நடிகை சமந்தா தனது நெருங்கிய தோழியும், பாடகியுமான சின்மயி குழந்தைகளுடன் விளையாடும் வீடியோ வெளியாகிய நிலையில், அந்த கியூட்டான வீடியோவை ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.