துபாயில் தனது சொந்த தங்கையுடன் குத்தாட்டம் போட்ட பிக் பாஸ் ஆயீஷா… கமெண்ட் பக்கத்தில் கழுவி ஊத்தும் ரசிகர்கள்

சின்னத்திரையில் பிரபல சீரியல் நடிகையாக வலம் வருபவர் நடிகை ஆயீஷா. இவர்  விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில்  21 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டார். அங்கு தனது திறமையான விளையாட்டால் சில நாட்கள் தாக்கு பிடித்தார். இதைத்தொடர்ந்து பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். 

   

மேலும் இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பான சத்யா என்ற சீரியல் மூலம் தமிழக மக்களின் மனதை கவர்ந்தவர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கிய இவர் 50 நாட்களுக்கும் மேல் பிக் பாஸ் வீட்டில் இருந்தார். இதைத் தொடர்ந்து குறைந்த வாக்குகள் பெற்று பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார் நடிகை ஆயிஷா.

பிக் பாஸ் வீட்டில் அவர் தனது சொந்த வாழ்க்கை பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அதை ரகசியமாகவே வைத்திருந்தார். அவர் இரண்டு முறை விவாகரத்து பெற்றவர் என முன்னாள் காதலர் கொடுத்த பேட்டி வைரல் ஆன நிலையிலும், அது பற்றி ஆயிஷா தரப்பு எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை ஆயிஷா அவ்வப்போது தனது ஃபோட்டோ ஷூட் புகைப்படங்களை பகிர்வதை வாடிக்கையாக கொண்டிருப்பவர். இவர் தனது காதலனின்  புகைப்படத்தை சில மாதங்களுக்கு முன்னர் இணையத்தில் பதிவு செய்து ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்தார்.

அந்த புகைப்படங்கள் இணையத்தில் படுவைரலானது. இவர் தற்பொழுது துபாயில் தனது தங்கையுடன் இணைந்து நடனம் ஆடும் அழகான ரீல்ஸ் வீடியோ ஒன்றை இணையத்தில் பதிவு செய்துள்ளார்.  இதோ அந்த வைரல் வீடியோ வீடியோ…

 

View this post on Instagram

 

A post shared by AYSHA🦋 (@aysha7__official)