முதன்முறையாக தனது குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டு மகிழ்ந்த ‘சார்பட்டா’ பரம்பரை வேம்புலி… 

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக விளங்குபவர் நடிகர் அஜித். இவர் நடிப்பில் வெளியான துணிவு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

   

இத்திரைப்படத்தில் ஒரு முக்கியமான நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்து கலக்கியவர் தான் நடிகர் ஜான் குகன். இவர் இதற்கு முன்னர் சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் நடித்து அசத்தியிருந்தார்.

இவர் நடிகை பூஜா ராமச்சந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். நடிகை பூஜா ராமச்சந்திரன் வீடியோ ஜாக்கியாக சின்னத்திரையில் தன்னுடைய பணியை துவங்கி, மாடல் நடிகை என திறமையை மெருகேற்றிக் கொண்டவர்.

தமிழில் முன்னணி கதாநாயகியாக நடிக்க முடியவில்லை என்றாலும் பீட்சா, காதலில் சொதபோது எப்படி, காஞ்சனா 2 போன்ற படங்களில் சிறுசிறு படங்களில் நடித்து பிரபலமானார்.

 

தற்பொழுது தமிழைத் தவிர தெலுங்கிலும் முக்கிய கதாபாத்திரங்களில் பல படங்களில் நடித்துள்ளார்.

மேலும் தற்பொழுது இவர் இயக்குனர் அட்லி தயாரிப்பில் உருவாகியுள்ள அந்த காலம் திரைப்படத்திலும் முக்கிய இடத்தில் நடித்திருந்தார்.

இவர் நிகழ்ச்சி தொகுப்பாளர் விஜே கேரிக் என்பவரை 2010ல் திருமணம் செய்து கொண்டார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக அவரிடம் இருந்து 2017 விவாகரத்து பெற்றார்.

இதை தொடர்ந்து நடிகர் ஜான் கோகன் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் மிகவும் எளிமையான முறையில் நடைபெற்றது . இதைத்தொடர்ந்து கர்ப்பமான நடிகை பூஜாவுக்கு சமீபத்தில் குழந்தை பிறந்தது.

சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடிய இதம்பதியினர் முதன்முறையாக தங்கள் குழந்தையுடன் எடுத்துக்கொண்ட போட்டோ சூட் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளனர்.

இந்த புகைப்படங்கள் தற்பொழுது ரசிகர்களால் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.