தலைகீழாக வித்தை காட்டும் பிக் பாஸ் பிரபலம்…. கலாய்க்கும் ரசிகர்கள்…

விஜய் டிவியில் சூப்பர் ஹிட் ஆக ஒலிபரப்பான நிகழ்ச்சி பிக் பாஸ்  இந்நிகழ்ச்சி மூலமாகவும் பிரபலமானவர் நடிகை லாஸ்யா. இவர் பிக் பாஸ் சீசன் 3 போட்டியாளராக கலந்து கொண்டு மிகவும் பிரபலமானார் .

   

லாஸ்லியாவின் ஆர்மி பட்டித்தொட்டி எங்கும் பிரபலமாக வலம் வர, பிக் பாஸ் வீட்டுக்குள் லாஸ்லியா மற்றும் கவின் இவர்களிடையே ஏற்பட்ட காதல் சூடு பிடிக்க மேலும் நிகழ்ச்சியை சுவாரஸ்யமானதாக கொண்டு சென்றது.லாஸ்லியா – கவின் காதலுக்கு ரசிகர்கள் ஆதரவு கொடுத்தாலும் லாஸ்லியாவின் பெற்றோர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்து. இதனால் இவர்களின் காதல் பிக் பாஸ் வீட்டுக்குள் அப்படியே அடங்கிப்போனது.

பின்னர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த லாஸ்லியாவுக்கு ரசிகர்கள் நல்ல ஆதரவு கொடுத்தனர்.பின்னர் கூகுள் குட்டப்பா என்ற படத்திலும் கதாநாயகியாகவும் நடித்துள்ளார். ஆனால் இப்படமும் லாஸ்லியாவுக்கு பெரியளவில் கைகொடுக்கவில்லை. இப்படத்தை தொடர்ந்து தமிழில் பட வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்து வந்த லாஸ்லியா ரசிகர்களை கூட்டத்தை தக்கவைக்க சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வந்தார்.

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தி வந்தார். இந்த நிலையில் லாஸ்லியா ஜிம் சூட் உடையில் இருக்கும் புகைப்படங்களை அவ்வவ்போது வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். தற்போது தலைகீழா நிற்கும் யோகா ஒன்றை செய்து புகைப்படமாக வெளியிட்டுள்ளார். அதை பார்த்தா ரசீகர்கள்  கலாய்த்து  வருகின்றனர்.