
விஜய் தொலைக்காட்சியில் முன்பு ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் தொடர் ரசிகர்களிடையே அதிக வரவேற்பை பெற்றிருந்தது. அன்றைய காலகட்டத்தில் பலருக்கும் விருப்பமான தொடர் என்றால் அது கனா காணும் காலங்கள் தான். தற்போது வரை அந்த தொடரில் நடித்த கதாபாத்திரங்களை ரசிகர்களால் மறக்க முடியாது.
இந்நிலையில், அத்தொடர் மூலம் பிரபலமான நடிகர் பிளாக் பாண்டி அங்காடி தெரு, சாட்டை மாசாணி, சகலகலா வல்லவன், பூஜை உட்பட சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார். எனினும் அதன் பிறகு, அவருக்கு பெரிய அளவில் வாய்ப்பு கிடைக்காமல் போனது. இது குறித்து பேட்டி ஒன்றில் அவர் தெரிவித்திருப்பதாவது, நானும் சிவகார்த்திகேயனும் நல்ல நெருங்கிய நண்பர்கள்.
இருவரும் ஒன்றாக சேர்ந்து தான் நிகழ்ச்சிகளுக்கு செல்வோம். எனவே, அவரிடம் வாய்ப்பு கேட்கலாம் என்று அவரின் வீட்டிற்கு சென்றிருந்தேன். எங்களுக்குள் நல்ல பழக்கம் இருந்ததால், பார்த்து பேசலாம் என்று நினைத்தேன். ஆனால் அவன் என்னை சந்திக்க வரவில்லை. மாறாக உதவியாளரிடம் பணம் கொடுத்து அனுப்பி விட்டார்.
எனக்கு படத்தில் நடிக்க வாய்ப்பு வேண்டும். அவரை சந்திக்க வேண்டும் என்று கூறிவிட்டு அந்த பணத்தை வாங்காமல் வந்து விட்டேன் என்று தெரிவித்திருக்கிறார்.