உலக நாடுகளில் பரவியிருக்கும் கேப்டன் புகழ்… கனடா தமிழ் சங்கத்தினர்… நம்ம கேப்டனுக்கு செய்த நெகிழ்ச்சி சம்பவம்…!

மிகச்சிறந்த நடிகரும், தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்த் அவர்கள் கடந்த மாதம் 28ஆம் தேதி அன்று உடல் நலக்குறைவு காரணமாக மறைந்தார். அவரின் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி விட்டு சென்றனர். மேலும், தொண்டர்கள் பொது மக்கள் என்று கேப்டன் இறுதி சடங்கில் கூட்டம் அலை மோதியது.

   

அதன்பிறகு, அவரின் உடல் எடுத்து செல்லப்பட்ட வழியெங்கும் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து அஞ்சலி செலுத்தினார்கள். கேப்டன் விஜயகாந்த் அவர்கள் செய்த நற்செயல்கள் மூலமே அவர் இவ்வளவு பெரிய அன்பை சம்பாதித்திருக்கிறார். அவருக்கு உலகம் முழுவதும் பல நாடுகளில் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

அந்த வகையில், கடந்த டிசம்பர் மாதம் 29ஆம் தேதி அன்று கனடாவில் வாழும் தமிழ் மக்கள் ரொறன்ரோ நகரத்தில் கேப்டனுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர். கன்னட தமிழ் சங்கத்தின் நிறுவனரான வள்ளிக்கண்ணன் மருதப்பன் இறுதி அஞ்சலி உரை ஆற்றியுள்ளார்.

அவர், சிறந்த நடிகர், அரசியல் தலைவர், அன்புமிக்க நண்பர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் இழப்பு எப்போதும் ஈடுகட்ட முடியாதது என்று தெரிவித்திருக்கிறார். அதன்பிறகு, சங்கத்தில் உள்ள உறுப்பினர்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.