கேப்டனுக்கு ராதிகா மீது மலர்ந்த காதல்.. ஏன் பிரிந்தார்கள் தெரியுமா.? ரகசியத்தை பகிர்ந்த பிரபலம்..!

மறைந்த நடிகர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் நடிகை ராதிகா குறித்து தெரிவித்த கருத்தை பத்திரிகையாளர் செய்யாறு பாலு பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார். அவர் கூறியிருப்பதாவது முதலில் விஜயகாந்த் கருப்பாக இருப்பதாக கூறி ராதிகா அவருடன் நடிக்க மறுத்தார். ஆனால் அதற்கு அடுத்த வருடமே அவருடன் இணைந்து 3 திரைப்படங்களில் நடித்து விட்டார்.

   

அதன் பிறகு, அவர்களுக்குள் நல்ல பழக்கம் இருந்தது. விஜயகாந்த் ஒருமுறை பேட்டியில் கூறியதாவது, எனக்கு சரியாக உடை அணிய தெரியாது. சாப்பிடுவதில் கூட பிசைந்து அப்படியே சாப்பிட்டு விடுவேன். ஆங்கிலம் பேச தெரியாது. அப்போது ராதிகா தான் எனக்கு நிறைய சொல்லித் தருவார்.

இப்போது நீங்கள் ஸ்டார் ஆகி விட்டீர்கள். அதற்கு ஏற்றவாறு நடந்து கொள்ள வேண்டும் என்று கூறுவார். வெளிநாடுகளுக்கு சென்றால், துணியை போட்டு கரண்டியில் சாப்பிட வேண்டும் என்று கற்றுக் கொடுத்தார். எந்த ஆடைக்கு எந்தவிதமான காலணி அணிய வேண்டும் என்பது குறித்து பல வகைகளில் கற்றுக்கொடுத்திருக்கிறார் எனக்கூறிள்ளார்.

விஜயகாந்திற்கு ராதிகாவை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. ஆனால், அவரின் நண்பர் ராவுத்தர் சினிமாவில் இருக்கும் நடிகை நம் வாழ்க்கைக்கு செட்டாகாது என்று கூறியதால், பிரேமலதாவை திருமணம் செய்து கொண்டார் என்று செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.