நலிவடைந்த மக்களுக்கு… 21 கோடி சொத்தை வாரி வழங்கிய வள்ளல்…. கேப்டனின் மற்றொரு நெகிழ்ச்சி சம்பவம்…!

கேப்டன் விஜயகாந்த் அவர்கள் மறைந்த பிறகு தான் அவர் செய்த பல நல்ல விஷயங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அவரை கொடை வள்ளல் என்றும் கலியுக கர்ணன் என்றும் மக்கள் போற்றி வருகிறார்கள். இந்நிலையில், நீண்ட நாட்களுக்கு பிறகு அவர் செய்த மிகப்பெரிய நெகிழ்ச்சி சம்பவம் வெளிவந்திருக்கிறது.

   

அதாவது, மதுரை திருமங்கலத்திற்கு பக்கத்தில் அமைந்துள்ள பெரிய ஆலங்குளம் பகுதியில் வசித்து வரும் பட்டியலின மற்றும் நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்த மக்களுக்கு தன் 7 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கியிருக்கிறார் கேப்டன் விஜயகாந்த் அவர்கள். சுமார் 23 ஆண்டுகளுக்கு முன்பு அவர் தானம் வழங்கிய அந்த இடத்தில் தற்போது 30 குடும்பங்கள் வசித்து வருகின்றன.

இன்று, அந்த இடத்தின் மதிப்பு 21 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விஜயகாந்த் மறைவு செய்தி அறிந்தவுடன் அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் அவரின் புகைப்படத்தை வைத்து கண்ணீருடன் இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.