கேப்டன் மட்டும் இல்லனா.. அந்த பட நிறுவனமே இல்ல.. ஊமை விழிகள் படம் எப்டி வந்துச்சுனு தெரியுமா.?

மறைந்த நடிகர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் பல நடிகர், நடிகைகளுக்கு உதவிகள்  செய்திருக்கிறார் என்றும், சுயநலமில்லாமல் தன்னிடம் உதவி கேட்டு வருபவர்கள் அனைவருக்கும் உதவக் கூடியவர் என்றும் பல பேட்டிகளில் திரையுலகை சேர்ந்த நடிகர் நடிகைகள் கூறுவதுண்டு.

   

திரையுலகில் மிகவும் யதார்த்தமான குணம் கொண்ட அவரைப் போன்று ஒரு மனிதரை, இனிமேல் பார்க்க முடியாது என்றே கூறலாம். அந்த வகையில், தொகுப்பாளர் ஒருவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் குறித்து சிறப்பான சம்பவம் ஒன்றை கூறியுள்ளார். அவர் தெரிவித்திருப்பதாவது, இயக்குனர் பாலச்சந்தர் ரஜினி, கமல் போன்றவர்களை வளர்த்து விட்டார் என்று பலரும் அவரே பாராட்டுகிறார்கள்.

ஆனால் கேப்டன் விஜயகாந்த் அவர்கள், ஒரு ஃபிலிம் இன்ஸ்டிடியூட்டயே வளர்த்துவிட்டிருக்கிறார். படித்துவிட்டு வருபவர்களுக்கு சினிமாவில் எளிதில் வாய்ப்பு கிடைப்பதில்லை . அப்படிப்பட்ட சூழலில், ஊமை விழிகள் திரைப்படத்தின் கதையோடு பிலிம் இன்ஸ்டிடியூட்டை சேர்ந்தவர்கள் சிவகுமார் உட்பட பல கதாநாயகர்களை சந்தித்து இருக்கிறார்கள்.

அவர்கள் எல்லாம் மறுத்து விட, கேப்டன் விஜயகாந்த் அவர்கள் வயது அதிகமான அந்த கதாபாத்திரத்தை யோசிக்காமல் உடனே ஏற்றுக் கொள்கிறார். என்னால் உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். நீங்கள் இந்த துறையில் நன்றாக வளருவீர்கள் என்றால் ஏற்றுக் கொள்கிறேன் என தயங்காமல் அந்த திரைப்படத்தில் நடித்திருக்கிறார். அவரைப் போன்று வேறு எந்த நடிகரும் அப்படி செய்யவில்லை என்று கூறியுள்ளார்.