பெண் தயாரிப்பாளருக்காக.. இப்டி ஒரு சம்பவத்தை செய்த கேப்டன் விஜயகாந்த்.. ஆனால் நடந்தது என்ன தெரியுமா.?

நடிகை வடிவுக்கரசி 80-களில் பிரபல நடிகையாக இருந்தவர். அதன் பிறகு, அம்மா வேடங்களில் நடிக்க தொடங்கினார். மேலும் வில்லி கதாபாத்திரங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். குறிப்பாக அருணாச்சலம் திரைப்படத்தில் அவர் நடித்த கூனி கதாபாத்திரம் இன்று வரை மக்களால் பேசப்பட்டு வருகிறது.

   

இந்நிலையில், அவர் ஒரு திரைப்படத்தை தயாரிக்க முடிவெடுத்த போது விஜயகாந்த் அவருக்கு உதவிய சம்பவத்தை பத்திரிகையாளர் செய்யாறு பாலு பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார். அவர் தெரிவித்திருப்பதாவது, நடிகர் விஜயகாந்தை சந்தித்த வடிவுக்கரசி, நான் ஒரு திரைப்படத்தை தயாரிக்க முடிவெடுத்திருக்கிறேன்.

அதில், யாரை கதாநாயகனாக போடலாம்? என்று கேட்டிருக்கிறார். உடனே, விஜயகாந்த் அந்த சமயத்தில் பிரபலமாக இருந்த நடிகர் மைக் மோகனிடம் கேளுங்கள் என்று கூறியுள்ளார். அதற்கு வடிவுக்கரசி, அவரிடம் ஏற்கனவே கேட்டுவிட்டேன். தொடர்ந்து பல நாட்கள் கால்ஷீட் இருப்பதால் நடிக்க முடியாது என்று கூறிவிட்டார் என வடிவுக்கரசி சொல்ல, அதற்கு விஜயகாந்த் ஒவ்வொரு நடிகரின் பெயராக கூறிக் கொண்டிருந்துள்ளார்.

உடனே வடிவுக்கரசி, அடுத்த நடிகர்களை கூறுகிறீர்களே? நான் நடிக்கிறேன் என்று சொல்லம்மாட்டீர்களா? என்று கேட்டுள்ளார். அதற்கு விஜயகாந்த், நீங்கள் மற்ற நடிகர்களை தான் கேட்டீர்கள், என்னை கேட்கவில்லையே? என்று கூறி மகிழ்ச்சியடைந்தாராம். அதன் பிறகு வடிவுக்கரசி தயாரிப்பில், 1986 ஆம் வருடத்தில் உருவான அன்னை என் தெய்வம் திரைப்படத்திற்கு விஜயகாந்த் நடித்துள்ளார்.

அத்திரைப்படம் வெளிவரப்போகும் நேரத்தில் பட்ஜெட் இல்லாததால் தன் சம்பளத்தை விட்டுக் கொடுத்து அத்திரைப்படத்தை ரிலீஸ் செய்ய உதவியிருக்கிறார். ஆனால், அந்த திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்று செய்யாறு பாலு கூறியுள்ளார்.