
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படத்தில் பல சுவாரஸ்யங்கள் மற்றும் சர்ப்ரைஸ்கள் இருப்பதாக கூறப்பட்டது. அந்த வகையில், அரசியல் தலைவரும், சிறந்த மனிதருமான மறைந்த நடிகர் கேப்டன் விஜயகாந்த் அவர்களை AI தொழில்நுட்பத்தின் மூலமாக அதில் நடிக்க வைக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.
இந்நிலையில், கேப்டன் விஜயகாந்தின் காட்சிகள் படமாக்கப்பட்டதாக கூறப்பட்டிருக்கிறது. அது தொடர்பான AI புகைப்படம் ஒன்றும் வெளியாகி உள்ளது. தற்போது அந்த புகைப்படம் தான் இணையதளங்களில் வைரலாகி கொண்டிருக்கிறது.
கேப்டன் விஜயகாந்த்தை GOAT திரைப்படத்தில் கொண்டு வருவதன் மூலம் படத்திற்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைப்பது மட்டுமன்றி, விஜய்யின் அரசியல் வாழ்க்கைக்கும் அது பேருதவியாக இருக்கும் என்று கூறப்பட்டிருக்கிறது.