நான் பட்ட அவமானம்… பொட்டல சாப்பாட்டுக்கு ஏங்கியவர்களுக்கு.. தினமும் இலையில் சாப்பாடு போட்ட மாமனிதர்…!

கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மறைவு, மக்களையும் திரையுலகை சேர்ந்த பிரபலங்களையும் பெரும் துக்கத்தில் ஆழ்த்தி விட்டது. எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைத்த நல்ல உள்ளம் இன்று நம்மோடு இல்லை. எனினும், அவரின் புகழ் எப்போதும் இந்த மண்ணில் நிலைத்து நிற்கும்.

   

அந்த அளவிற்கு பல உதவிகளை மக்களுக்கு செய்திருக்கிறார் கேப்டன். இந்நிலையில், அவர் திரை துறையில் வளர்ந்து வந்த சமயங்களில், தான் பட்ட கஷ்டங்களை பழைய பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது, பல கஷ்டங்களையும், அவமானங்களையும் நான் சந்தித்து இருக்கிறேன்.

ஏற்கனவே கருப்பாக ஒருத்தர் வந்து நடித்து சாதித்து விட்டார் . நீ சாதிக்க முடியாது. கருப்பாக இருக்கிறாய் என்று பல இடங்களில் ஒதுக்கப்பட்டேன். பல கஷ்டங்களையும், அவமானங்களையும் தாங்கி தாங்கி மனது இறுகி விட்டது. ஒரு முறை நான் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது கதாநாயகி வருகிறார் என்று எழுப்பி விட்டார்கள்.

அப்போது மிகவும் கஷ்டப்பட்டேன். என்ன சாப்பிட கூட விடமாட்டேங்குறாங்க என்று வருத்தப்பட்டேன். அது தான் என் மனதில் ஆழமாக பதிந்தது. அனைவருக்கும் சாப்பாடு தர வேண்டும் என்ற எண்ணம் வந்தது. அதற்கு முன்பு பொட்டல சாப்பாடு தான் எல்லோருக்கும் வழங்குவார்கள்.

முதன் முதலில் இலையில் சாப்பாடு போட சொன்னது நான் தான். அதை பெருமையாக கௌரவமாக கூறிக் கொள்கிறேன். நான் என்ன சாப்பிடுகிறேன். அதை தான் எல்லாரும் சாப்பிட வேண்டும். நான் சாப்பிடும் உணவு அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன் என்று தெரிவித்திருக்கிறார். இந்த காணொளியை பார்த்த பலரும் நேர்மையான மனிதரை நாம் இழந்து விட்டோம் என்று வருத்தப்பட்டு வருகிறார்கள்.