
தேமுதிக தலைவர்கள் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் உடல்நலகுறைவு காரணமாக 21 வயதில் பிறந்த மாதம் 28ஆம் தேதி அன்று மரணம் அடைந்தார் அவரின் மறைவு செய்தி திரையுலக நட்சத்திரங்களையும் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தி விட்டது.
ஏனெனில் முன்னணி நடிகராகவும், சிறந்த அரசியல் தலைவராகவும் திகழ்ந்த கேப்டன் தனிப்பட்ட வாழ்க்கையில் எந்தவித பாகுபாடும் இன்றி அனைவரிடமும் அன்பாகவும் எதார்த்தமாகவும் பழகியவர். குறிப்பாக, சிறிய கதாபாத்திரங்களில் நடிக்கும் குணசித்ர நடிகர்களுக்கு தன் திரைப்படங்களில் நடிப்பதற்கு வாய்ப்பளித்தவர்.
மேலும், அவர் நடிகர் சங்க தலைவராக இருந்த போதும் நடிகர்களுக்குள் எந்த பிரச்சினையும் வராமல் பார்த்துக் கொண்டார். திரைப்படங்களில் மிகவும் அபாயகரமான காட்சி ஒன்றில் டூப் இல்லாமல் நடித்திருக்கிறார். இது குறித்து அவரின் மனைவியான பிரேமலதா விஜயகாந்த் பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.
அவர் கூறியிருப்பதாவது, ஹெலிகாப்டரில் தொங்கும் ஒரு காட்சி படமாக்கப்படும் போது நாங்கள் பயப்படுவோம் என்று எங்களை அனுப்பி விட்டார். கயிறு எதுவும் இல்லாமல் கம்பியை வெறும் கை கால்களால் பிடித்துக்கொண்டு தொங்கியபடி ஆபத்தான முறையில் அந்த காட்சியில் நடித்து முடித்தார் என்று கூறியிருக்கிறார்.
அந்த பேட்டியில் தொகுப்பாளினியாக இருந்த கலா மாஸ்டர், கோவாவில் நடந்த அந்த படப்பிடிப்பில் டூப் கலைஞர் தயாராக இருந்தார். ஆனால் விஜயகாந்த், அவரும் என்னைப் போன்ற மனிதர் தானே. அவர் நடிக்கும் போது நான் ஏன் நடிக்க கூடாது? என்று கூறி துணிச்சலாக அந்த காட்சியில் நடித்திருக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.