
நடிகர் விஜயகாந்த் திரைத்துறையில் முன்னணி கதாநாயகனாக தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்து, கலக்கி வந்தவர். அதன் பிறகு, அரசியலில் களமிறங்கி, அதிலும் வெற்றி கண்டார். மிகச்சிறந்த ஆளுமை கொண்டிருந்த அவர், தொண்டர்களுக்கும் மக்களுக்கும் பல உதவிகள் செய்திருக்கிறார்.
சமீப நாட்களாகவே உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் துரதிஷ்டவசமாக இன்று காலையில் அவர் மரணம் அடைந்த செய்தி வெளியானது. அதனால் ரசிகர்கள் பெரும் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர். தன் இரண்டு மகன்கள் மீதும் அளவு கடந்த அன்பு வைத்திருந்த விஜயகாந்தின் ஆசை கடைசி வரை நிறைவேறாமல் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது தன் இரண்டு மகன்களின் திருமணத்தை சிறப்பாக நடத்த வேண்டும் இன்று விஜயகாந்த் மிகவும் ஆசைப்பட்டு இருக்கிறார். தான் உடல்நிலை சரியில்லாமல் இருந்த போதும் மகன்களின் திருமணத்தை எப்படியாவது பார்த்து விட வேண்டும் என்று நினைத்திருக்கிறார். அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க முடியவில்லையே என்ற மன வருத்தம் அவருக்கு இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரனுக்கு கடந்த 2019 ஆம் வருடம் டிசம்பர் மாதத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. தொழிலதிபர் ஒருவரின் மகளுடன் அவருக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில் நான்கு வருடங்கள் கடந்தும் திருமணம் நடைபெறவில்லை.
கேப்டன் விஜயகாந்த், ஏழை மக்களுக்கும் தொண்டர்கள் பலருக்கும் தன் சொந்த செலவில் திருமணம் செய்து வைத்து அழகு பார்த்தவர். ஆனால் அவரின் சொந்த மகன்களின் திருமணத்தை பார்க்க முடியாமல் போனது மிகப் பெரிய வருத்தமே.