திரிஷாவை தரக்குறைவாக பேசிய விவகாரம்… மன்சூர் அலிகானை வரிசை கட்டி அடிக்கும் பிரபலங்கள்…!

நடிகர் மன்சூர் அலிகான் சமீபத்தில் பேட்டி ஒன்றில் நடிகை திரிஷா குறித்து கீழ்த்தனமாக தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது சமீபத்தில் வெளியாகி ரசிகர்களுடைய மிகப்பெரிய வரவேற்பை பெற்ற லியோ திரைப்படத்தில் நடிகர் மன்சூர் அலிகான் நடித்திருந்தார்.

அதனைத்தொடர்ந்து, அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், “திரிஷாவுடன் நடிக்க போகிறோம் என்ற உடன் நிச்சயம் ஒரு பெட்ரூம் சீன் இருக்கும். நடிகை குஷ்பூ, ரோஜா போல த்ரிஷாவை கட்டிலில் தூக்கி போடலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்” என்று பேசியிருந்தார். இதனால் கடும் கோபமடைந்துள்ள த்ரிஷா, மன்சூர் அலிகான் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்திருந்தார்.

அதனைத்தொடர்ந்து, இயக்குனர் லோகேஷ் கனகராஜூம் மன்சூர் அலிகான் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். அந்த பேட்டியால் பெரும் சர்ச்சை வெடித்த நிலையில், நடிகர் மன்சூர் அலிகான் இது பற்றி விளக்கம் கூறியிருக்கிறார். அதில், “நான் கூறியதை தவறாக சித்தரித்து விட்டார்கள்” என்பது போன்று தெரிவித்திருக்கிறார்.

எனினும், அவர் பேசியதற்கு வருத்தம் கூறவில்லை. இந்நிலையில் நடிகர் சாந்தனு, நடிகைகள்  மாளவிகா மோகனன், குஷ்பூ, பாடகி சின்மயி, இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் மற்றும் தயாரிப்பாளர் அர்ச்சனா போன்றோர் மன்சூர் அலிகான் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.