இந்த குழந்தையை நியாபகம் இருக்கா?… வளர்ந்து கதாநாயகியான நம்ம சந்திரமுகி பொம்மியை பாருங்கள்…!

கடந்த 2004 ஆம் வருடத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான சந்திரமுகி திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. தற்போது வரை ரசிகர்களின் விருப்பமான படமாக அத்திரைப்படம் அமைந்திருக்கிறது. அதில், ரஜினிகாந்த் உடன் பொம்மி என்ற சிறுமி சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

எனினும், ரசிகர்களிடையே அந்த குழந்தை அதிக வரவேற்பை பெற்றது. அப்படத்தில் இடம்பெற்றுள்ள அத்திந்தோம் என்று பாடலில் ரஜினிகாந்த்துடன் அழகாக ஆடும் அந்த  சிறுமியின் பெயர் பிரஹர்ஷிதா.

   

தற்போது பெரிய பெண்ணாக வளர்ந்து நடிகையாக இருக்கும் இவர் குறும்படங்களை தயாரிக்கும் இயக்குனராகவும் வலம் வருகிறார்.

கடந்த 2021 ஆம் வருடத்தில் இவருக்கு திருமணம் ஆனது. குழந்தை மற்றும் கணவருடன் அவர் இருக்கும் சமீபத்திய புகைப்படங்கள் வெளியாகி வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது.