போதும்ப்பா விட்ருங்க… அவரின் கால் தூசுக்கு வருமா?… கொந்தளித்து கழுவி ஊத்திய ரசிகர்…!

இப்போது பார்த்தாலும் பார்த்துக்கொண்டே இருக்கலாம் என்று தோன்றும் திரைப்படங்களில் ஒன்று சந்திரமுகி. கடந்த 2005-ஆம் ஆண்டு இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வசூல் சாதனை படைத்த திரைப்படம். ஜோதிகாவின் அசுரத்தனமான நடிப்பு, ரஜினி மற்றும் வடிவேல் இணைந்து நடித்த காமெடி, நடனம், பாடல்கள் என்று அனைத்துமே பெரிய அளவில் பேசப்பட்டது.

   

இந்நிலையில், சமீபத்தில் அத்திரைபடத்தின் இரண்டாம் பாகம் தமிழ் உட்பட 5 மொழிகளில் வெளியானது. இதில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்திருந்தார். அவருடன் ராதிகா சரத் குமார், வடிவேலு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். எதிர்பார்ப்புடன் இத்திரைப்படத்திற்கு சென்ற ரசிகர்கள் கடும் ஏமாற்றம் அடைந்தனர். மேலும், விமர்சகர்களிடம் படுமோசமான விமர்சனங்களை பெற்றது.

மேலும், ரசிகர்கள் சந்திரமுகி-2 திரைப்படத்தை பங்கமாக கலாய்த்து வருகிறார்கள். இந்நிலையில், திரையரங்கிற்கு சென்று படத்தை பார்த்த ஒரு ரசிகர், ரஜினி நடிக்கலனு சொல்லும் போதே தெரியவேண்டாமா?… படம் எப்படி இருக்கும்னு… கங்கனாவால்  ஜோதிகா நடிப்பிற்கு கால் தூசிக்கு வர முடியுமா? என்றெல்லாம் பேசி கொந்தளித்திருக்கிறார்.