புயலால் வந்த கஷ்டம் போதாதா…? நீங்க வேறயா… எண்ணூரில் சமூக விரோதிகளின் கொடூரச்செயல்… முன்வந்த விஜய் மக்கள் இயக்கம்…!

சென்னையை புரட்டி போட்ட மிக்ஜாம் புயல் ஓய்ந்து மூன்று நாட்கள் கடந்த பிறகும் தற்போது வரை அதன் தாக்கம் குறைந்தபாடில்லை. மக்கள் தங்குவதற்கு இடமின்றி உணவின்றி தவித்துக் கொண்டிருக்கிறார்கள். பல இடங்களில் தேங்கி கிடக்கும் தண்ணீர் குறையவில்லை. இந்நிலையில், மக்கள் வெள்ளத்தில் சிக்கி தவித்துக் கொண்டிருக்க, சமூக விரோதிகள் சிலர் எண்ணூருக்கு அருகில் தேங்கி கிடக்கும் தண்ணீரில் வேதிபொருளை கலந்திருக்கிறார்கள்.

விஜய் மக்கள் இயக்கத்தினருக்கு இந்த தகவல் தெரிய வந்திருக்கிறது. உடனே, அவர்கள் நேரடியாக களத்தில் இறங்கி உதவி அளித்து கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் வைரலாகும் அந்த வீடியோவை பார்ப்போர், மனிதர்கள் இப்படியும் இருப்பார்களா? கொடுமையான நிகழ்வு என்று திட்டி வருகிறார்கள். விஜய் மக்கள் இயக்கத்தினருக்கு வாழ்த்துக்கள் என்றும் கூறி வருகிறார்கள்.