இந்த ரணகளத்துலையும் கிளுகிளுப்பா… ஓடும் வெள்ளத்தில் மீன் பிடித்த நபர்கள்… வைரலாகும் வீடியோ…!

சென்னையில் பலத்த மழை கொட்டி தீர்த்ததோடு மிக்ஜாம் புயலும் உருவாகி மக்களை வாட்டி வதைத்து வருகிறது. மின்சாரம் துண்டிக்கப்பட்டதோடு, வெள்ளம் ஏற்பட்டு வீடுகளில் தண்ணீர் புகுந்தது. மக்கள் அத்தியாவசியத்திற்கு கூட வெளியே செல்ல முடியாமல் தத்தளிக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

இந்நிலையில், இந்த வெள்ளத்தில் இரண்டு நபர்கள் பெரிய மீன்களை ஆளுக்கொன்று பிடித்துக் கொண்டு ஓடுகிறார்கள். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.